மூச்சு இழுத்து மூச்சடக்கி
உந்தி எறிய
பரந்து விரிந்து நீரில் அமிழும்
ஒவ்வொரு ஈயத்துண்டின்
அமிழ்தலிலும்
மெல்லிய
சூழ் விளக்கு வெளிச்சத்தின்
ஓரா முள் கிளித்து ஒழுகும் இரத்தத்திலும்
பறியில் இருந்து தவறிய
மீன் ஒண்றின்
பிரிதலிலும்
ஊறி ஊறி தண்ணீர் திண்ற
நீர் சிரங்கு ரணத்திலும்
குளிர் காய
இழுத்து விடும்
வீடி புகையின் வெப்பத்திலும்
உறைந்தே கிடக்கும்
No comments:
Post a Comment