Wednesday, October 11, 2017

அம்மா

உன்
சேலைத்தலப்பு
நாணய முடிச்சின்
கசங்கல்கள் சொல்லும்,
எனக்கான உன்
சேமிப்பின் வலிகளை.

Tuesday, June 20, 2017

மொழி

தூரத்து நிலா
வண்ணத்துப்பூச்சி
கரடி பொம்மை
வண்ண மீன்
கோழிக்கஞ்சு
முயல்குட்டி
வானவில்
மழைத்தூறல்
பக்கத்து தெரு மாமாவின்
தாடி
கடற்கரைக்கிழிஞ்சல்கள்
அப்பாவின் கைப்பேசி
அண்ணாவின் புத்தகப்பை
அக்காவின் பென்சில்கள்....

இவை அனைத்தும்
எந்த கல்லூரியில் கற்றனவோ..
அழுகின்ற குழந்தயின்
அழுகை நிறுத்தும்
மழலை மொழிகளை.

Monday, February 27, 2017

வலி

உனக்குத்தாகம் என்றால் 
ஏனடி என்கண்ணில் 
கிணறு வெட்டினாய்.