நான் கணணிகளோடு நிரல் மொழி
பேசுபவன்
நீ
வார்த்தைகளை மென்று மெளனங்களால் விரல் மொழி
பேசியவள்
இப்போதெல்லாம் நான்
வயலின் கற்றுக்கொண்டு இருக்குன்றேன்
உன்னோடு பேச
பட்டாம் பூச்சிகளுக்கு
உன்னை அதிகம் பிடிக்குமாமே
உண்மையா
எந்த குழந்தகள்தான்
அம்மாவை பிடிக்காது என்று சொல்லும்.
ஒரு முறையேனும்
பூக்கடைப்பக்கம் வந்து போ
பறித்து சிறை வைத்த பூக்கள் எல்லாம்
தன் சொந்தங்களை தேடி வாடுகின்றன
ஒருமுறை ஏனும்
பூக்களின் புன்னகை பேசு
மீண்டும் மலரட்டும்
பூக்களும் பூக்கடையும்.
நீ ஒன்றும் ஓவியம் அல்ல
அழகை வரையும் தூரிகை
மோனாலிசாக்களிள்
தூரிகைத்தாய்.
உலகின் முதல் மொழி
பேசுபவளே
எப்படி முடிகிறது உன்னால்.
பிரபஞ்ச ஆச்சர்யங்களை
ஒரு புன்னகையில் ஒளித்து வைக்க.
உலக அதிசயங்கள் ஏழு என்று
புத்தகத்தில் படித்து இருக்குறேன்
உன்னை பார்த்த போதுதான்
தெரிந்தது அதிசயங்கள் ஏழு அல்ல
No comments:
Post a Comment