இப்போது இருந்துருந்தால்
தவராசன் அண்ணாவுக்கு ஐம்பத்து நான்கு வயது முடிந்துருக்கும்.
அடிக்கடி அம்மா சொல்லும் போதெல்லாம் கேட்டுருக்கின்றேன்
பக்கத்து வீட்டு மாலா அக்காவுக்குத்தான்
அவரை பேசி வைத்துருந்தார்களாம்
மாலா அக்காவுக்கு ஒரு குறையுமில்லை
ஒற்றையாக கோருத்த
கனகாம்பர மாலையில்
எப்போதும் கலகலப்பாகவே இருப்பார்
எங்கள் சின்ன அக்கா மாதிரியே
கல்யாணத்துக்கு நான்கு நாட்கள்தான்
இருந்ததாம்
கங்கு வேலிக்கு வைக்கோல்
ஏற்றப்போனவர்
பெருவெளியில் சுடப்படு
பிணமாக கிடந்தாரம் .
இன்றைக்கும் கனகம்மா ஆத்த
நெஞ்சிலடிச்சி கத்துவா.
கொஞ்சம் கொஞ்சமாக
தவராசா அண்ணாவைப்போலவே
மறந்தே போனோம்
ஆனையிறகுச் சண்டையில்
No comments:
Post a Comment