Sunday, October 13, 2019

வன்முறையிலா வகுப்பறை

'ஆயிஷா' இரா.நடராஜன் எழுதிய (ஆயிஷா இவர் எழுதிய குழந்தைகளுக்கான மிகச்சிறந்த குறு நாவல்) வன்முறையிலா வகுப்பறை எனும் கட்டுரைத்தொகுப்பானது ஆசிரியர்களின் ஆசான் எனலாம்.தண்டணையில்லா கல்வி முறையில் ஒரு குழந்தையை தண்டனை கொடுப்பதற்கும்,தட்டிக்கொடுப்பதற்கும் இடையேயான மெல்லிய கத்திமுனை இடைவெளியை எவ்வாறு கையாளவேன்டும் என ஓர் சிறந்த வழிகாட்டியாக வழிநடத்திச்செல்கின்றது , குழந்தையின் மகிழ்ச்சியின் நீட்சியிலேயே குழந்தைகளின் கற்றல் ஆர்வம் மேலோங்கும் எனும் தத்துவத்தோடு.மேலைத்தேய உழவியல் ஆய்வாளர்களின ஆய்வு முடிவின் மேற்கோள்களோடும்,ஒவ்வொரு கட்டுரையையும் ஒவ்வொரு பாடமாக நடத்திச்செல்கின்றார்.
கண்டிப்பான பெற்றோர்,வறுமை,அடக்குமுறையென
நம் சமூகத்தின் பல்வேறுபட்ட சூழல்களிலிருந்து சின்ன சின்ன கனவுகளோடு பள்ளிகுகூடம் வரும் குழந்தைகள் பெரிதாக எதை எதிர்பாற்கும்.தன் செல்ல முயற்சிக்கு சின்ன சின்ன பாராட்டுக்களும் கைதட்டல்களுமே அதன் அதிகபட்ச எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்பை எல்லா ஆசிரியர்களாலும் நிறைவு செய்ய முடிகின்றதா?
அணுகுமுறை என்பது ஆசிரியரின திறனை அடிப்படையாக கொன்டது,இங்கு திறன் என்பது குழந்தை பற்றிய உழவியல் புரிதலேயாகும்.
ஒரு குழந்தையின் ஒழுங்கீன செயல்களின் பின்னால் வலுவான காரணமும்.நோக்கமும் மறைந்துருக்கும்.சில காரனங்கள் நம்மை கரைந்து போகச்செய்யும் அளவுக்கு சோகமானதாகவும் மோசமானதாகவும் கூட இருக்கலாம்.பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு போகும் குழந்தைகளுக்கு நாம் எதை கொடுப்போம்? வன்முறையிலா வகுப்பறையில் பெற்ற குட்டி குட்டி கனவுகளையும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையுமா?அல்லது பிஞ்சி மனங்களில் காயங்களையும் வலிகளையும் பழி சொற்களையுமா?
இதில் எதைக்கொடுப்பீர்கள் என்பதை அழகாக சொல்லித்தருகின்றது  வன்முறையிலா வகுப்பறை.

No comments:

Post a Comment